கிறிஸ்ட்சர்சில் நபர்கள் இருவர் வீடு வீடாகச் சென்று 100 டாலருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதாகவும் தான் சுகாதார அமைச்சில் இருந்து வரும் அஅதிகாரி எனவும் கூறியுள்ளார்.

இது ஒரு மோசடி செயல் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆடிங்டன் குடியிருப்பாளர் ஒருவர் நேற்று காலை அதிகாரிகள் போன்று உடையணிந்த இருவர் கதவைத் தட்டியதாகக் கூறினார்.

சமூக தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர்கள் சுகாதார அமைச்சின் திட்டத்திலிருந்து வந்ததாகக் கூறியுள்ளனர்.

 "தடுப்பூசி செயல்முறையை விளக்கும் ஒரு தாள் கூட அவர்களிடம் இருந்தது மற்றும் 100 டொலர்கள் செலுத்திய பின் யாராவது வருவார்கள் பிறகு அவர்கள் உங்களுக்கு தடுப்பூசி போடலாம் என தெரிவித்துள்ளனர்.

"மோசடிகளில் கவனமாக இருப்பது பற்றியும், தடுப்பூசிகள் இலவசம் என்றும்,அவற்றுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் நான் செய்திகளில் நிறைய கேள்விப்பட்டேன், அதனால் நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன் என குறித்த குடியிருப்பாளர் தெரிவித்தார்.

இப்போது பணம் செலுத்துங்கள், பின்னர் தடுப்பூசியைப் பெறுங்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

"மக்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் தோற்றத்தை பார்த்து ஏமாறக்கூடாது ஏனென்றால் அவர்கள் மிகவும் தொழில்முறை தோற்றத்தில் இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

ஒரு அறிக்கையில்,சுகாதார அமைச்சகம் இது ஒரு மோசடி என்றும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

கிரிஸ்ட்சர்ச்சில் இரண்டு பேர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசிகளை கட்டணமாக வழங்குவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஒரு அறிக்கையில் காவல்துறையினர் தாங்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், யாரேனும் அவ்வாறி உடனடியாக 105 இற்கு தகவல் தெரிவிக்கவும் என தெரிவித்துள்ளனர்.