மத்தியவங்கியில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மோசடிகளை மறைப்பதற்காகவா  அதன் நாணய சபையின் செயலாளர் கேஎம்ஏன் என் தவுலாகல நீக்கப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

நாணயசiயின் செயலாளர் நீக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2015 இல் திறைசேரி பிணை முறிமோசடி நிகழ்ந்தவேளை குறிப்பிட்ட அதிகாரி அதனை அம்பலப்படுத்தி மத்திய வங்கியின் நிலையை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கினார் என தெரிவித்துள்ள  ரோகிணி கவிரட்ண இதன் காரணமாக அவர் நாணயசபையிலிருந்து நீக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகி;ன்றது குறிப்பிட்டுள்ளார்.

பிணைமுறிமோசடி மற்றும் எதிர்கால மோசடிகளை மறைப்பதற்கான நடவடிக்கையா இது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்தியவங்கியை ஊழல்களில் இருந்து சுத்தம் செய்யும் நடவடிக்கையில் அவரே முன்னணியில் காணப்பட்டார் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மோசடிகளிற்கு எதிராக துணி;ச்சலாக நடவடிக்கை எடுப்பவர் என பெயர் பெற்றவர் அந்த அதிகாரி எனவும் தெரிவித்துள்ளார்.

தவுலாகலவை பதவி நீக்குவதால் யார் பயனடையப்போகின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகளிர் அமைப்புகள் சிவில் அமைப்புகள் சட்டத்தை மதிக்கும் நபர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தவுலாகலவை பதவி நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் உடனடி கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.