இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், 50 வீதமானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளது.

இதன் எண்ணிக்கை ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து 68 ஆயிரத்து 195  என ஒளடத உற்பத்திகள் வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்காக 6000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டுள்ளது என்றார் .