கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்ற கர்ப்பிணி தாய்மார்களை கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக தாக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருந்தது.

பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு குறித்த தொற்று பரவும் என நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிற்கமைய பிறக்கும் குழந்தைகளுக்கு குறித்த நோயை எதிர்ப்பதற்கான சக்தி அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ,அத்துடன் பிறக்கும் குழந்தைகளின் நிலைமைய தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.