சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் இந்த கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பெரும்போகத்தில் ஒரு லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட பரப்பில் சோளப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொனராகலை, அம்பாறை, அநுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ,படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், காப்புறுதியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், சேதமடைந்த பயிர்களை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.