கிறிஸ்மஸ் தினத்தை வரவேற்கும் வகையில் பிரித்தானியாவில் எல் இ டி மில் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயிலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹாம்ப்ஷையரில் இருந்து அல்ரெஷ்போர்டு என்ற இடத்துக்கு நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக எல் இ டி மின் குமிழ்களால் ரயில் அலங்கரிக்கப்பட்டது.

13 ஆயிரத்துக்கும் அதிகமான குமிழ்களால் ரயில் முழுவதும் பொருத்தப்பட்டன. இருளைக் கிழித்துக் கொண்டு சென்ற ரயிலை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதாகக் கூறப்படுகின்றது.