கொவிட் முன்றாவது அலை உருவாகலாம் என்ற அடிப்படையில் இத்தாலி அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

 

கொவிட் 19 மூன்றாம் கட்ட அலையைத் தவிர்ப்பதற்காக இத்தாலியில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.எதிர்வரும் பண்டிகை நாட்களின் போது இத்தாலியில் மூன்றாம் கட்டக் கொவிட் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட அலை ஏற்பட்டுவிட்டால் அது மிகப் பெரிய அழிவைத் தரும் எனவே அதனைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இத்தாலியின் பல மாகாணங்களில் கொவிட் வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அந்நாட்டின் மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.