இன்று காலை ஆக்லாந்தின் Whangaparaoa சாலை ஓரத்தில் உள்ள பூங்காவில் ஒரு இருக்கையில் இருவர் அமர்ந்திருந்த போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.

இந்நிலையில் பலத்த காயங்களுடன் அவர்கள் இருவரும் ஆக்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து வாகனத்தின் ஓட்டுநர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.