விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் உருவாகக் கூடிய கொத்தணிகளை கட்டுப்படுத்த கூடியவாறு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டங்கள் என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், விமான நிலையத்தை திறந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துமளவிற்கு இலங்கையில் நுட்பமான செயன்முறைகள் எவையும் இதுவரையில் உருவாக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமல்ல. குறைந்தபட்சம் கொழும்பில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையே அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமலுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் நாம் விரும்பும் நேரத்தில் எதனையும் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் எண்ணமே இந்த நிலைமைக்கு காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#ChampikaRanawaka #Lanka #Covid19 #WHO #Foreingers