ஆக்லாந்து பல்கலைக்கழகம் அதன் மவோரி பெயருக்கு மாற்றத்தை அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முந்தைய மவோரி பெயர் Te Whare Wānanga o Tāmaki Makaurau என்பதாகும்.இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் புதிய மவோரி பெயர் Waipapa Taumata Rau​ என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்து பல்கலைக்கழகம் குறித்த இந்த பெயர் மாற்றத்தை இன்று காலை Waipapa marae இல் கொண்டாடியது.

இந்த விழாவின்போது பல்கலைக்கழகத்தின் புதிய பெயருடன் பொறிக்கப்பட்ட ஒரு தகடு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.