வெலிங்டனில் நேற்றையதினம் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பெண் ஒருவர் வெலிங்டன் பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு வெலிங்டன் புறநகர்ப் பகுதியான வோகல்டவுனில் உள்ள டிராவர்ஸ் ஸ்ட்ரீட் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டதாக துப்பறியும் ஆய்வாளர் டாரெல் ஹார்பூர் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் வோகல்டவுன் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் திங்கள்கிழமை விசாரணைகள் தொடர்ந்ததால் குடியிருப்பாளர்கள் இப்பகுதியில் பொலிஸ் இருப்பு அதிகரிப்பதைக் காணலாம் என்றும் ஹார்பூர் கூறியுள்ளார்.

மேலும் இன்று காலை பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் பொலிஸை 105 இல் தொடர்பு கொள்ளவும், கோப்பு எண் 210725/5546 ஐ மேற்கோள் காட்டவும் ஹார்பூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.