கிஸ்போர்னில் வேன் மோதி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வில்லோ ஸ்டோன் என்ற குறித்த சிறுமி சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் லிஸ்னர் ஸ்ட்ரீட் மற்றும் வினிஃப்ரெட் ஸ்ட்ரீட் சந்திப்புக்கு அருகே வேன் மீது மோதி படுகாயமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டார்.

துப்பறியும் சார்ஜென்ட் எரிக் ஹண்டர், மோதல் சூழ்நிலை குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஆபத்தான நிலையில் கிஸ்போர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

நாளையதினம் பிற்பகல் கிஸ்போர்ன் நிகழ்வுகள் மையத்தில் வில்லோவுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.