அண்மையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து தற்போது தரனாக்கியில் உள்ள அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் கூட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

நோய் அறிகுறிகளுடன் தாரானகியில் உள்ள எவரும் அல்லது சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று வந்த எவரும் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான கூடுதல் சோதனை வசதிகள் தற்போது நியூ பிளைமவுத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 உடன் ஒத்த அறிகுறிகள் உள்ள எவரும் ஹெல்த்லைன் 0800 358 5453 என்ற எண்ணில் அழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் நாடு முழுவதும் கழிவுநீரை ESR பரிசோதிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கட்கிழமை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.