மாகாண ரீதியில் சிறுவர்களுக்கான நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. 

நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு இவை போதுமானதல்ல. 

இதேபோன்று, வழக்கு விசாரணை சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வயதானவர்களுடன் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றமையும் நிலவுகின்றது. 

இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு,அனைத்து மாகாணங்க்ளிலும் இவ்வாறான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவி சுஜாதா அழகப்பெரும தெரிவித்துள்ளார்.