Dunedin அருகே உள்ள Mosgiel அருகே ஏற்பட்ட ஒரு கடுமையான விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று மதியம் 3.15 மணியளவில் School Road south மற்றும் Gordon சாலை சந்திக்கும் இடத்தில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன

இந்நிலையில் இரண்டு பேர் ஆம்புலன்ஸ் மூலம் Dunedin மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செயின்ட் ஜான் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.