பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில்துடுப்பெடுத்தடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்களை எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 155 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.