கத்தார் நாட்டின் மத்திய வங்கி தமது தேசிய நாணயத்தின் ஐந்தாவது வெளியீட்டை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி (கத்தார் தேசிய தினம்) ATMகள் மூலம் புழக்கத்தில் விடும் என அறிவித்துள்ளது.

 

கத்தார் மத்திய வங்கி அதிகாரிகளின் கூற்றுப்படி, மேற்குறிப்பிட்ட ஐந்தாவது பதிப்பில் 62 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பல விவரக்குறிப்புகள் உள்ளன. மேலும் புதிதாக 200 ரியால்கள் மதிப்புள்ள புதிய பணத்தாள் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது, இது தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரியால்களுக்கும் 500 ரியால் பணத்தாள்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என தெரிவித்துள்ளது.

 

இதன் முதற்கட்டமாக, புதிய வெளியீட்டின் 8 பில்லியன் ரியால்கள் புழக்கத்தில் விடப்படும், மேலும் இது 2021 ஜனவரி மாத இறுதிவரை இந்த செயல்முறை நடைமுறையில் இருக்கும், புதிய ஐந்தாவது தாள்கள் வெளியீட்டின் மொத்த தொகையான 20 பில்லியன் கட்டாரி ரியால்களாக அமையும் என செய்தி வெளியிட்டுள்ளது.