வைகாடோவில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் நஹிஹினபூரிக்கு (Ngāhinapōuri) அருகிலுள்ள பதேரங்கியில் உள்ள (Paterangi) பெல் சாலைக்கு (Bell Road) அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

வாகனத்தின் பயணி ஆபத்தான நிலையில் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வைகாடோ காவல்துறை மூத்த சார்ஜென்ட் ஜான் மெக்கார்த்தி தெரிவித்தார்.

ஓட்டுநருக்கு மிதமான காயங்கள் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீயணைப்பு அவசர நியூசிலாந்தும் மூன்று தீயணைப்பு வண்டிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.