நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு இந்த கல்லீரல். கல்லீரல் தான் நம் உடலில் ஏகப்பட்ட வேலைகளை செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்லீரலில் கொழுப்பு படிந்தால் பல பிரச்சினை உருவாக்கி விடும்.

கல்லீரலில் சிறிய அளவு கொழுப்பு இருப்பது இயல்பான ஒரு விஷயம். ஆனால் அதுவே அதிகப்படியான கொழுப்பு காணப்பட்டால் உடல்நலப் பிரச்சினையாக மாறிவிடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.இந்த கல்லீரல் நோயை எப்படி ஆரோக்கியமான முறையில் தடுப்பது என்பதை பார்ப்போம்.

 

  • எலுமிச்சை பழ சாற்றை தினமும் தண்ணீரில் கலந்து குடித்து வருதனால் கல்லீரல் கொழுப்பை நீக்கலாம். மேலும் இதன் அமிலத்தன்மை கல்லீரை பாதுகாக்கின்றது. 

 

  • முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள் கல்லீரல் செயற்பாடுகளான பித்தநீர் சுரப்பு, உணவில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின்களை உறிஞ்சுதல், நச்சுக்களையும், தேவையற்ற கொழுப்புக்களையும் நீக்க உதவி செய்கின்றன. தினமும் இரண்டு துண்டு முலாம்பழம், பப்பளா விதைகள், தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து வடிக்கட்டமல் அப்படியே குடித்தால் கல்லீரல் சுத்தமாகிவிடும்.

 

  • ஸ்ரோபரி உள்ள நார்ச்சத்து உடம்பை பாதுகாப்பதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி கல்லீரை சுத்தம் செய்யவும் உதவுகின்றன.

 

  • தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இவை கணயம், மற்றும் கல்லீரல் சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.

 

  • கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை காய்கறிகளை தங்களது அன்றாட உணவில் சேர்த்து கொ்ளள வேண்டும்.

 

  • புளியில் உள்ள நார்ச்சத்துக்கள் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிறந்தது. தினமும் 30g புளியை எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் 3 டம்ளர் அளவு குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்கள் அனைத்து வெளியேறும். 

 

  • அதிகம் காபோவைதரேற்றுஅரிசி, ஓட்ஸ், உருளை கிழங்கு போன்றவை குறைத்து கொள்ளுங்கள்.

 

  • குறைவான காபோவைதரேற்று கீரைகள், வெங்காயம், மிளகு ப்ரோக்கோலி,வெள்ளரி பிஞ்சு,பின்ஸ், காலிபிளவர் சேர்த்து கொள்ளுங்கள்.