Waikato River கிழக்குப் பகுதியில் வசிக்கும் ஹாமில்டன் (Hamilton) குடியிருப்பாளர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை ஹாமில்டன் நகர சபையில் வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஃபையர்ஃபீல்ட் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் (Fairfield Baptist Church ) மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை வேட்பாளர்களை சந்திக்கும்்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

கவுன்சிலராக இருந்த கடந்த மே 4ஆம் திகதி அன்று இறந்த மார்கரெட் ஃபோர்சித்தின் இடத்தை நிரப்பவே தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

குறித்த இடைத்தேர்தலில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஜூலை 27 முதல் குடியிருப்பாளர்களின் அஞ்சல் பெட்டிகளில் வாக்குப் பொதிகள் (Voting package) வரத் தொடங்குவதுடன் அஞ்சல் வாக்குப்பதிவுகள் அன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 18 புதன்கிழமை நண்பகல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள் அன்று மாலை 5 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.