சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 

எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர்.

 

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள்  ஆணையகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றது.

 

தற்போது நாட்டில் நிலவும் கோரோனா வைரஸ் நிலமையைக் கருதிற்கொண்டு குறைந்தளவான உறவுகளே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கமும் பங்கேற்றிருந்தார்.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சர்வதேசமும் ஐ.நாவும் நீதியை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியிருந்தனர்.