பிரிஸ்பேனுக்கு (Brisban) வடக்கே புரூஸ் நெடுஞ்சாலையில் (Bruce Highway) குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் 24 வயது பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

53 வயது மூத்த கான்ஸ்டபிள் டேவிட் மாஸ்டர்ஸ் நேற்று அதிகாலை 3 மணியளவில் பர்பெங்கரியில் (Burpengary) திருடப்பட்ட கார் ஒன்றை மடக்கி பிடிக்க சாலையில் நின்றிருந்தபோது கார் ஓட்டுனர் வேண்டுமென்றே அதிகாரியை நோக்கி காரை செலுத்தியுள்ளமை போக்குவரத்து கேமராக்களில் பதிவாகிய காட்சிகள் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை மொரேஃபீல்டில் (Morayfield) கைது செய்தனர்.

சீனியர் கான்ஸ்டபிளை தாக்கிய திருடப்பட்ட காரில் அவர் ஒரு பயணி என்று துப்பறியும் நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யபட்ட பெண்ணுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதுடன் நாளையதினம் கபூல்ச்சர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Caboolture Magistrates Court) அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குயின்ஸ்லாந்து போலீஸ் கமிஷனர் கட்டரினா கரோல், வாகனத்தின் ஓட்டுநரைக் கண்டுபிடிக்கும் வரை விசாரணைகள் தொடரும்," என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எந்தவொரு தகவலும், அல்லது தொடர்புடைய டாஷ்கேம் காட்சிகளும் உள்ள எவரும் சாட்சிகளுக்கு முன்வருமாறு துப்பறியும் நபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.