நியூசிலாந்து நாட்டில் பன்னெடுங் காலமாக சிறப்பாக இயங்கி வரும் நியூசிலாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் முத்தமிழ்ச் சங்கமும்  இணைந்து நியூசிலாந்து தமிழ் மொழிக்குழு என்ற சிறப்பு குழுவை உருவாக்கி அதைச் செவ்வனே நடாத்தி வருகின்றது.

NZTL என்னும்போது இவ் சிறப்புக்குக்குழு தமிழ் மொழியை நியுசிலாந்து கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியைப் இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

அதற்கிணங்கமவுண்ட் ரோஸ்கில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற தொழிலாளர் கட்சியின் துணைத்தலைவர் மற்றும் போக்குவரத்து, அலுவலகத் தொடர்பு மற்றும் மனிதநலபாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் மாண்புமிகு திரு மைக்கேல் உட் அவர்களின் முன்னிலையில் சமீபத்தில் விளக்கக் காட்சி ஒன்றை காட்சிப்படுத்தியது . 

மாண்புமிகு அமைச்சர் திரு மைக்கேல் உட் அவர்கள் நியுசிலாந்து நாட்டில் இயங்கிவரும் தமிழ் சார்ந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ் மொழியை நியுசிலாந்து பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்த விளக்கக் காட்சி ஜுன்  11, 2021 அன்று  மாண்புமிகு அமைச்சர் திரு மைக்கேல் உட் உடனான சந்திப்பின் போது அவர்களுக்கு நன்கு விளக்கம் அளித்தது.

இவ்விளக்கக்காட்சி அமைச்சர் மற்றும் நியூசிலாந்து தமிழ் மொழி குழுவிற்கு நிறைவைத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்இவ்வமைப்பு திரு மைக்கேல் உட் அவர்களை இக்குழுவின் கௌரவ ஆலோசகராகப் பணியாற்ற  கேட்டுக் கொண்டதற்கு, அதற்கிணங்க அவர் ஒப்புதல் அளித்ததற்கு குழு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. 

நியுசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு சுந்தரராஜன் செல்வவிநாயகம் மற்றும் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சதாசிவம் குட்டி அவர்களும் இக்கூட்டத்தை மிக நேர்த்தியாக அமைத்துக் கொடுத்தது போற்றுதலுக்குரியது என அனைவரும் தெரிவித்தனர்.

மேற்கூறிய விளக்கக் காட்சி நியூசிலாந்தில் பயிலும் தமிழ் பேசும் மாணவ மாணவியர்க்கு எவ்வகையில் அவர்களுடைய தாய் மொழிக்கு துணைபுரியும் எனத் தெளிவாக விளக்கமளித்தது.

இம்மாணவ மாணவியர் தம் தாய் மொழியில் படித்தல் மற்றும் எழுதலில் திறன் அற்றவர்களாக இருப்பதும் கண்டறியப் பட்டது.எனவே தாய் மொழியைப் பயிற்றுவிக்கும் இம்முயற்சி அவர்களது இயல்பான திறனை வெளிக் கொணர அளப்பரிய துணை நல்கும் எனவும் இவ்விளக்கக் காட்சி நிலைப்படுத்தியது.

மேலும்பன்னாட்டு நிறுவனங்களான UNESCO மற்றும் OECD போன்றவை தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுதியிருப்பதை மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது. இவ்விளக்கக் காட்சி தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க இணைய தளத்தில் இயங்கும் பல்வேறு செயலிகள் முன்னுதாரணமாக உள்ளன என எடுத்துரைத்ததை அனைவரும் வரவேற்றனர். 

இக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் திரு மைக்கேல் உட் அவர்களின் பூரண இசைவுடனும் ஆலோசனைகளுடனும் இனிதே நிறைவுற்றது.

நியூசிலாந்து தமிழ்மொழிக்குழு இப்பணியை தொடர்ந்தும் முன்னெடுத்து அம்முயற்சிகள் நன்கு வெற்றிபெற வாழ்த்துவோம்.