குத்துச்சண்டை வீரர் ஃபாவ் வேக் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் மூவர் படுகொலை குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், மற்றொரு நபர் வீரரை காயப்படுத்தியதாக ஒப்புக் கொண்டார்.

வேக் ஒரு ஆக்லாந்து தெருவில் கடந்த மே மாதம் 16ஆம் திகதி தாக்கப்பட்டு மே 23 அன்று ஆக்லாந்து நகர மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் இன்று ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சாலி ஃபிட்ஸ்ஜெரால்ட் முன் ஆஜரானார்கள்.

29 வயதான ஓஃபா ஹீ மூனி ஃபோலாவ் என்ற நபர் ஃபாவ் வேக்கைத் தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.

எவ்வாறாயினும், மற்ற மூன்று பேரில் ஒருவர் படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் அவர்களது வழக்கறிஞர்கள் மூலம் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என வாதிடப்பட்டது.

மேலும் அவர்களுக்கு இடைக்கால பெயர் ஒடுக்கம் காணப்படுவதுடன் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.