சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜனேஷ் பிரசாத்தின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அவரது இறுதி சடங்கில் அவருடைய குழந்தைகள் தங்கள் தந்தையை உருக்கத்துடன் நினைவு கூர்ந்தனர்.

தெற்கு ஆக்லாந்தில் உள்ள பாபடோயோட்டோவில் (Papatoetoe) கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் ஒரு சூறாவளி பேரழிவை ஏற்படுத்தியது.இதில் 41 வயதான பிரசாத் என்ற நபர்  கொல்லப்பட்டார்.

அவர் போர்ட்ஸ் ஆஃப் ஆக்லாந்தின் தெற்கு ஆக்லாந்து சரக்கு மையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, சூறாவளியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலுக்கு இன்றையதினம் விரியில் (Wiri) பிரியாவிடை வழங்க அவரது இறுதிச் சடங்கிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.

பிரசாத் ஒரு நல்ல வாழ்க்கைக்காக 2015 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் பிஜியிலிருந்து நியூசிலாந்து வந்தவர் ஆவர்.

இன்று அவர் உயிருடன் இல்லாத நிலையில் அவருடைய குழந்தைகள் மீளாத்துயரத்தில் இருப்பதுடன் தன் தந்தையின் விருப்பப்படி தாங்கள் தங்களுடைய இலட்சியத்தை அடைவோம் என அவருடைய இறுதிச்சடங்கில் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.