கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக சுமார் 1200 நேப்பியர் குடியிருப்பாளர்கள் இன்று மாலை கழிப்பறைகளை சுத்தப்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நகரின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான கென்னடி வீதியின் இன் (Kennedy Rd) கீழ் இந்த குழாய் உள்ளது.

நேப்பியர் சிட்டி கவுன்சில் குடியிருப்பாளர்கள் மேலும் அறிவிக்கும் வரை கழிப்பறைகளை சுத்தப்படுத்துவதையும், பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் சலவை இயந்திரங்களைப் பயன்படுத்துவதையும்,குளியலையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பில் ஹெராக் செயின்ட் (Bill Herock St) மற்றும் டவுனிங் அவே (Downing Ave) இடையே கென்னடி வீதி (Kennedy Rd) மூடப்பட்டுள்ளது.

சபையின் நீர் குழுவினர் சேதத்தை சரிசெய்ய இரவு முழுவதும் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலைக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.