நேற்றையதினம் நார்த்லேண்டின் தர்கவில்லில் (Dargaville) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கேரிங்டன் வீதியில் (Carrington Rd) ஒருவர் துப்பாக்கிச்சுடு நடப்பதாக திங்கள்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சுட்டில் காயமடைந்த இருவர் தர்கவில் (Dargaville) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

"இந்த சம்பவத்தின் சூழ்நிலைகளை நிறுவவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காணவும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்."

சம்பவம் நடந்த நேரத்தில் கேரிங்டன் வீதியில் இருந்து வெளியேறிய ஒரு காரின் காட்சிகளும் தேடப்பட்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த கார் கருப்பு நிற நிசான் விங்ரோட் போன்றது (Nissan Wingroad) எனவும், பதிவு தகடு எண் CAK346 என அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தைப் பார்த்த எவரும் அதை அணுக வேண்டாம் எனவும் உடனடியாக 111 ஐ அழைக்கவும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.