நடிகர் அமரசிகாமணி சென்னையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். இந்த தகவலை அவரது மகன் பார்த்திப அமரசிகாமணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டிவி சீரியல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் நடித்துள்ள அமரசிகாமணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70. கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமரசிகாமணி, சிகிச்சை பலனின்றி இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.