ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவாகியுள்ளார்.

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி ஹசன் ருஹான இருதடவைகள் பதவி வகித்துவிட்டதால் இத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

7 பேருக்கு மாத்திரம் இத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது

இத்தேர்தலில் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi ) வெற்றியீட்டியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரைசி என அறியப்படும் சயீத் இப்ராஹிம் ரைசோல் சதாட்டி, Sayyid Ebrahim Raisol-Sadati() சுமார் 62 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார்.

60 வயதான இப்ராஹிம் ரைசி 2019 ஆம் ஆண்டு முதல் ஈரானின் பிரதம நீதியரசராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.