தெற்கு ஆக்லாந்தில் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவாகும் என ஆக்லாந்து மேயர் பில் கோஃப் எதிர்பார்க்கிறார்.

நேற்றையதினம் தெற்கு ஆக்லாந்து புறநகர்ப் பகுதியான பாபடோயோட்டோ முழுவதும் சூறாவளியால் பல சேதங்கள் ஏற்பட்டதுடன் ஒருவர் கொல்லப்பட்டார்.மற்றும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவற்கு நிவாரண நிதியாக அரசாங்கம், 100,000 டொலர்கள் வழங்கும் என்று அவசரகால மேலாண்மை அமைச்சர் கிரிஸ் பாஃபோய் கூறினார்.

மேலும் "தீவிர சேதங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது ஒரு காப்புப்பிரதியாக இருக்கும்" என மேயர் பில் கோஃப் கூறினார்.

"தேவை என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது ... நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக அளவு தேவை இருந்தால், நாங்கள் மீண்டும் இது தொடர்பாக ஆலோசித்து அந்த நிதியை மேலும் அதிகரிக்க முடியுமா என்று பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி அமைச்சர் கார்மல் செபுலோனி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு கொடுப்பனவுகளை செயல்படுத்துவதாக அறிவித்தார்.

உதவி தேவைப்படும் நபர்களுக்கு ஹாட்லைன் எண் 0800 752 102 திங்கள் காலை முதல் செயல்படும்.

இந்நிலையில் நியூசிலாந்தின் காப்பீட்டு கவுன்சில் நான்கு முதல் ஆறு வாரங்களில் சேதங்களின் மதிப்பை அறிந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.