பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசியும், பணமோசடியில் ஈடுபட்டதுமான புகாரில் சிக்கி கைதாகி உள்ள யூடியூபர் மதன் கோடிக்கணக்கில் பணம் குவித்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. எளிதில் அடையாளம் காண முடியாத வகையில், வி.பி.என்., என்ற தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு, ஆபாசமாக பேசி பணத்தை குவித்துள்ளார்.