இன்று பிற்பகல் முதல் நாளை இரவு 11 மணி வரை வைராராபாவிற்கு (Wairarapa) Metservice கடும் மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.

கைகுரா (Kaikōura) கடற்கரை பகுதியில் நாளை மாலை 6 மணி வரை கடும் மழை இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் 280 மிமீ வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மணிக்கு 20 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 2 மணி வரை வார்டுக்கு (Ward) வடக்கே உள்ள மார்ல்பரோவிற்கும் (Marlborough) அம்பர்லிக்கு (Amberley) வடக்கே உள்ள வடக்கு கேன்டர்பரிக்கும் (North Canterbury) நாளை காலை 9 மணி வரை கடும் மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wellington மற்றும் வடக்கு மார்ல்பரோவில் (northern Marlborough) இன்று பிற்பகல் முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி வரை பலத்த காற்று வீசக்கூடும்.

லெவிஸ் பாஸ் (Lewis Pass) மற்றும் போர்ட்டர்ஸ் பாஸ் (Porters Pass) சாலைகளில் இன்று பிற்பகல் முதல் நாளை காலை வரை பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் Metservice அறிவித்துள்ளது.