தெற்கு ஆக்லாந்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 3.30 மணியளவில், ஹைபிரூக் டிரைவ் ஆஃப்-ராம்ப் (Highbrook Drive off-ramp ) மற்றும் ஹைபிரூக் டிரைவ் ஆன்-ராம்ப் (Highbrook Drive on-ramp) இடையே உள்ள மாநில நெடுஞ்சாலை ஒன்றில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதிகாலை 3.36 மணியளவில் சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டதாக செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.