வெலிங்டனில் ஒரு சூப்பர் மார்க்கெட் கார்பார்க்கில் இன்று அதிகாலை ஐந்து நபர்களுக்கு இடையே நடந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் சண்டை மற்றும் ஒழுங்கற்ற நடத்தை காரணமாக நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் படுகாயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இந்நிலையில் நபருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மோதலை கண்டவர்களிடம் இருந்து சாட்சிகளை கோருவதுடன், உதவக்கூடிய தகவல் உள்ள எவரும் கோப்பு எண் 210619/5096 ஐ மேற்கோள் காட்டி 105 இல் பொலிஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.