ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதினுக்கு ஜோ பைடன் பரிசு ஒன்றை வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, 23 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ரேண்டால்ப் ஏவியேட்டர் கிளாஸை விளாதிமிர் புதினுக்கு ஜோ பைடன் பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளாஸின் விலை 299 டாலர் என ரேண்டால்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாஸின் வலப்பக்க லென்ஸில் ஜோ பைடனின் கையெழுத்து பதிக்கப்பட்டுள்ளது. ரேண்டால்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் இந்த ஏவியேட்டர் கிளாஸ் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.