சீனாவின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து உள்ளார்.

சீனாவில் அமைந்துள்ள ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணை தலைவர் மற்றும் அந்நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவராக பேராசிரியர் ஜாங் ஜீஜியான் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பேராசிரியர் ஜாங் ஜீஜியான் கடந்த 17ஆம் திகதி காலை 9.34 மணியளவில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார்.

மேலும் ஜாங்கின் மரணம் பற்றி வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. பல்கலை கழகத்தின் வலைதள பக்கத்தில் நேற்று வரை ஜாங்கின் பெயர் தலைமைத்துவ பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

ஜாங் அந்த பல்கலை கழகத்தின் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகவும் மற்றும் சீன அணு கழகத்தின் துணை தலைவர் ஆகவும் இருந்து வந்துள்ளார்.  இதுதவிர பல்கலை கழகத்தின் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.