ஆக்லாந்து தொழிலதிபர் எலிசபெத் (யிங்) ஜாங் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடு ஏலத்தில் விடப்பட்ட நிலையில் குறித்த வீடு 1.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளது.

ஜாங் இறக்கும் போது கடனாளிகளுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் கடனாக இருந்ததால், இந்த வீடு அடமான சொத்தாக பட்டியலிடப்பட்டது.

கிழக்கு ஆக்லாந்தின் சன்னிஹில்ஸில் (Sunnyhills) உள்ள ஏழு படுக்கையறை, மூன்று குளியலறையை கொண்ட குறித்த வீட்டிற்கான ஏலம் 1.4 மில்லியன் டொலர்களில் தொடங்கி 1.8 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் ஏலத்தில் விற்பனை ஆகியுள்ளது.

தனது குடும்பத்துடன் 23 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து நியூசிலாந்து வந்து குடியேறினார்,அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் உற்சாகமான தொழிலதிபர்" என்று கூறலாம்.

இந்நிலையில் ஜாங் தனது 55ஆவது வயதில் தனது வீட்டில் 47 வயதான ஒரு நபரால் அவர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.