சீனாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக சான்க்சி மாகாணத்தில் அமைந்துள்ள Hukou நீர்வீழ்ச்சியானது உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி அங்கு பாய்கின்ற ஆறுகளில் 2வது பெரிய ஆறான மஞ்சள் ஆற்றில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. குறுகிய பள்ளத்தாக்கில் ஆர்ப்பரித்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும்.

 

மேலும் ,உலகின் மிகப் பெரிய மஞ்சள் நீர்வீழ்ச்சி மட்டுமின்றி மஞ்சள் ஆறின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி என்ற பெருமையும் சிறப்பும் இதற்கு உண்டு.