தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்தார். ரஜினியின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்தது. வரும் 21ஆம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தற்போது நாளை மறுநாள் புறப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மூன்று மாதம் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.