அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு ஜெனீவாவில் இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30 இடம்பெரும் என்றும் இது நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கு நீடிக்கும் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் (Yuri Ushakov)தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜோ பைடன்(joe biden) ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.