இலங்கையில் நேற்று (15) கொவிட்-19 தொற்றுறுதியான 2,334 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் 546 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் 250 பேருக்கும், களுத்துறையில் 268 பேருக்கும், கண்டியில் 161 பேருக்கும், குருணாகலில் 105 பேருக்கும், காலியில் 100 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 125 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

கேகாலை மற்றும் புத்தளத்தில் தலா 21 பேருக்கும், அநுராதபுரத்தில் 10 பேருக்கும், மாத்தறையில் 88 பேருக்கும், நுவரெலியாவில் 162 பேருக்கும், அம்பாறையில் 51 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இரத்தினபுரியில் 89 பேருக்கும், ஹம்பாந்தோட்டையில் 15 பேருக்கும், பதுளையில் 41 பேருக்கும், மட்டக்களப்பில் 96 பேருக்கும். கிளிநொச்சியில் 22 பேருக்கும், மாத்தளையில் 79 பேருக்கும், வவுனியாவில் 17 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

மன்னார், திருகோணமலை மற்றும் மொனராகலையில் தலா இருவருக்கும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவையில் தலா ஒருவருக்கும் தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.