கோழிகளுக்கான உணவுப் பொருள் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அனைத்து இலங்கை கோழி வர்த்தகர்களின் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி ,சோள இறக்குமதி தற்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு சோளம் ஒரு கிலோகிராமின் விலை 95 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கின்றார்.

அதனால் , கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.