இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதன்படி ,தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி ரெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையுடன் சேர்த்து 09 நாடுகளுக்கான தனது தூதுவர்களை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடேன் நடவடிக்கை எடுத்துள்ளார்.