யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றியடையும் என யசோதா என்ற யானை கணித்துள்ளது.

இதன்படி ,விளையாட்டு போட்டிகளில் எந்த அணி வெல்லும் என்பதை விலங்குகளை கொண்டு கணிப்பது மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது.

அந்நிலையில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெல்வது யார் என யசோதா என்ற 41 வயது யானையை கொண்டு கணிக்கப்பட்டது. வெள்ளிப் பெட்டி ஒன்றில் ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் பிரான்சின் கொடியை யானை எடுத்ததால் அந்த அணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,தங்கள் அணி முதல் போட்டியிலேயே தோற்கும் என்ற யானையின் ஆருடத்தால் ஜெர்மனி நாட்டு கால்பந்து ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஹேம்பர்க் அருகே உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள யசோதா என்ற யானை இந்தியாவின் மைசூரிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.