பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முக கவசம் அணிய அவசியமில்லை என அதிபர் போல்சனேரோ அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி ,கொரோனா தடுப்பு பணியில் அதிபர் போல்சனேரோவின் அலட்சியத்தால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமானவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என அதிபர் அறிவிக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை என அதிபர் போல்சனேரோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய , மலேரியா நோய்க்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தால் கொரோனாவை குணப்படுத்தும் அதிபரின் திட்டம் வீண் என செனட் சபையில் சுகாதாரத் துறை அமைச்சர் சாடியுள்ளார்.