வெலிங்டன் மிருகக்காட்சிசாலையின் ( Wellington Zoo) ஒரு கால் கிவி, நீண்ட நாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணித்தது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மிருகக்காட்சிசாலையில் வசித்து வந்த இந்த டாஹி என்ற கிவி ஒரு கால் இல்லாமையால் காட்டுக்குள் விடுவிக்க முடியவில்லை.

மிருகக்காட்சிசாலையின் தலைமை நிர்வாகி கரேன் ஃபைஃபீல்ட் இது குறித்து தெரிவிக்கையில் "இது மிருகக்காட்சிசாலையின் ஊழியர்களுக்கு மிகப்பெரிய இழப்பு, டாஹி மிருகக்காட்சிசாலையின் ஒரு பகுதியாக இருந்தது. "அது எப்போதும் இங்கே என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது என தெரிவித்தார்.