கடுமையான எலும்பியல் அறுவை சிகிச்சையை பிராந்தியத்தின் மருத்துவமனையால் சமாளிக்க முடியாததால், அவசர எலும்பு முறிவுகள் உள்ள வைராராபா (Wairarapa) மக்கள், வெலிங்டன் (Wellington) அல்லது பாமர்ஸ்டன் நோர்த் (Palmerston North) செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அறுவைசிகிச்சை நிபுணர்களின் பற்றாக்குறை மாஸ்டர்டனில் உள்ள வைரராபா மருத்துவமனையில் செய்யப்படும் எலும்பியல் சேவைகளை குறைப்பதற்கான முடிவுக்கு வழிவகுத்தது.

மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமையால் மாவட்ட சுகாதார வாரியம் இனி பிராந்தியத்தின் அனைத்து எலும்பியல் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த சேவைகளை மூடுவது ஒரு இடைக்கால தீர்வாகும், இது தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும் என்று வைரராபா டி.எச்.பி. தலைமை நிர்வாகி டேல் ஆலிஃப் தெரிவித்தார்.

விரிவான ஆட்சேர்ப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், அவர்களால் பதவிகளுக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை, என்று அவர் கூறினார்.

நியூசிலாந்தில் பொருத்தமான பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை, மேலும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் தேவை.

இது ஒரு சிக்கலான செயல்முறையாகும்,எனவே இதுவரை வெளிநாட்டு விண்ணப்பதாரர்களை நியமிக்க DHB க்கு முடியவில்லை, ”என்று ஆலிஃப் கூறினார்.