பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் இரண்டாவது மகன் கண்டசாலா ரத்னகுமார். பாடகர், டப்பிங் கலைஞர் என பல முகங்களை கொண்டவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் நேற்று திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு கண்டசாலா ரத்னகுமார் காலமானார்.