மூன்று நபர்களை அநாகரீகமாக தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஒரு முக்கிய தொழிலதிபர் மேல்முறையீடு விசாரணை முடிவடையும்வரை சிறையில் இருப்பார் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு வார விசாரணைக்குப் பின்னர், மூன்று அடக்குமுறை தாக்குதல் மற்றும் ஒரு சாட்சியைத் தடுக்க முயன்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட குறித்த தொழிலதிபருக்கு கடந்த மாதம் இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபரின் வழக்கறிஞர் டேவிட் ஜோன்ஸ் கியூசி அவரது குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

அவர் தனது வாடிக்கையாளருக்கு ஜாமீன் கோரினார், மேல்முறையீட்டு விசாரணை நிலுவையில் உள்ளமையால் நீதிபதி வென்னிங் மறுத்துவிட்டார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜோன்ஸ் அதை சவால் செய்தார் இந்நிலையில் இன்று காலை வெளியிடப்பட்ட தீர்ப்பில், ஜாமீன் முடிவுக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.