அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைக் கடந்துள்ளது.

 

அதன்படி ,கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

இங்கு கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 51 இலட்சத்து 59 ஆயிரத்து 529 ஆக பதிவாகியுள்ளது.

 

இதேநேரம், அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 88 ஆயிரத்து 906ஆக பதிவாகியுள்ளது.

 

மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88 இலட்சத்து 55 ஆயிரத்து 593 ஆக காண்பபுடுகிறது.

 

சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.